சச்சின் - கங்குலி சாதனையை அடிச்சு தூக்கி சாதனை படைத்த கோலி- ரஹானே ஜோடி.!! - Seithipunal
Seithipunal


கரீபிய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றுள்ளது.

இந்நிலையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடக்கிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்கள், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்கள் எடுத்தது. 

இதை தொடர்ந்து 75 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, கோலி, ரஹானே ஜோடி 4 விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்க்க, மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 260 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது. 

sachin

இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் ரஹானே - கோலி ஜோடி 8வது முறையாக 4வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அசத்தியுள்ளார். இதன் மூலம் 4வது விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய ஜோடிகளில் ஜாம்பவான் சச்சின் - கங்குலி இணையை பின்னுக்கு தள்ளியது. 

தவிர, ரஹானே- கோலி ஜோடி, 100 ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 9வது முறையாகும். மேலும் ஆண்டிகுவாவின் சர் விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்திய ஜோடி 100 ரன்களுக்கு மேல் சேர்ப்பது இது 3வது முறையாகும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kohli and rahane beat sachin ganguly record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->