ஐபிஎல் 2022 : முகமது ஷமிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஆபாச நடிகை.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15-வது சீசனில் நான்காவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி 19.4 ஓவர் முடிவில் 161 ரன்களை எடுத்து, இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றது. 

இந்தப் போட்டியில் 3 விக்கெட்களை எடுத்த முகமது ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிறப்பாக பவுலிங் செய்த முகமது ஷமிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் குவித்தனர். இந்த வரிசையில் அமெரிக்க ஆபாச நட்சத்திரமான கேந்திரா லஸ்ட்  தனது ட்விட்டர் பக்கத்தில் முகமது ஷமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஷமியின் மிகச்சிறந்த பர்ஃபாமென்ஸ் இது என டுவிட் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kendra lust wish for mohammad shami


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->