#IPL2022 : ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை சமன் செய்த ஜாஸ் பட்லர்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2வது தகுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. 

அதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லர் 4வது சதம் அடித்ததன் மூலம் ஒரே ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்தவர்களுக்கான சாதனை பட்டியலில் கோலியுடன் முதல் இடத்தை பட்லர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
ஏற்கனவே அவர் 3 சதங்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விராட் கோலி 4 சதம் அடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jos butler equalise most century in ipl season with Virat Kohli


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->