இந்தியா-இலங்கை 3வது டி20 போட்டி.. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விலகல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா-இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி  இன்று இரவு 7மணிக்கு தர்மசாலா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இதில், இன்று நடைபெறும் மூன்றாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், இந்திய அணி வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்ய முனைப்பு காட்டும், அதேபோல் ஆறுதல் வெற்றியாவது பெற இலங்கை அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது டி20 போட்டியில் இருந்து விலகியுளாளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ishan kishan ruled out for 3rd t20


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->