ஒரு இடத்திற்கு நான்கு அணிகளுக்குமே வாய்ப்பு! யாரு யாரு அடுத்த சுற்றுக்கு போவது யாரு! நடக்குது ஐபிஎல் போர்! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டியில் இதுவரை மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. நான்காவதாக எந்த அணி தகுதி பெறும் என்பதற்கு நான்கு அணிகள் களத்தில் இருக்கின்றன. இந்த நான்கு அணிகளுக்குமே இறுதிவரை வாய்ப்பு இருக்கும் என்பதால் அடுத்து நடக்க உள்ள ஐந்து லீக் ஆட்டங்களில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகிறது. 

இதுவரை நடந்து முடிந்த 51 லீக் போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் எட்டு வெற்றிகளுடன் மும்பை மற்றும் டெல்லி அணிகள் உள்ளன. இதில் நான்காவதாக இடம்பெறப்போகும் அணிக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் போட்டியிடுகின்றன. 

6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்து நடைபெற உள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் அது அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது ஏறக்குறைய உறுதியாகி விடும். ஒருவேளை தோற்கும் பட்சத்தில் சிக்கல் நீடிக்கும். தற்போது ஒவ்வொரு அணியும் தகுதி பெறுவதற்கு தேவையான வெற்றி தோல்விகள் குறித்து நாம் பார்க்கலாம். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான வாய்ப்பு :
அந்த அணி தற்போது ஆறு வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. இன்னும் ஒரு போட்டியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் உள்ளது. இந்த போட்டி தொடரில் இருந்து முதலாவதாக வெளியேறிய பெங்களூர் அணி தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் தன்னுடைய வாய்ப்பை அதிகரிக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தானாகவே வெளியேறிவிடும். ஏனெனில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பதினொரு புள்ளிகளுடன் உள்ளது. இன்னுமொரு போட்டி மட்டுமே இருப்பதால் அந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அது 13 புள்ளிகளை மட்டுமே பெரும் நிலையானது உருவாகும். 

அதேபோல இன்று இரவு நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகின்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தனது அடுத்த சுற்றுக்கான வாய்ப்பினை அதிகரிக்கும். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த லீக் போட்டியில் தோல்வி அடைய வேண்டும் அல்லது குறைந்த ரன்ரேட் அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது. அப்போது தான் ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 

ஹைதராபாத் அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைந்தாலும் அந்த அணிக்கான வாய்ப்பனது இருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா பஞ்சாப் அணிகளில் வெற்றி பெறும் அணி அடுத்து மோதவுள்ள அதாவது பஞ்சாப் அணி சென்னை உடனும், கொல்கத்தா அணி மும்பை உடன் மோத உள்ளது,  அந்த போட்டிகளில் பஞ்சாப் கொல்கத்தா அணிகள் தோல்வி அடைய வேண்டும். அவ்வாறு தோல்வி அடைந்தால்  ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு ரன்ரேட் அடிப்படையில் முன்னேறும். 

கொல்கத்தா அணியின் வாய்ப்பு : 

இன்று மொஹாலியில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை  கொல்கத்தா வீழ்த்த வேண்டும் அதே போல தனது இறுதி லீக் ஆட்டத்தில் மும்பை உடன் மோதும் கொல்கத்தா அணியும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அப்பொழுது 14 புள்ளிகளுடன் பட்டியலில் இருக்கும். அப்பொழுது சன் ரைஸ் ஹைதராபாத் அணி எஞ்சியுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் இரண்டு அணிகளும் தலா 14 புள்ளிகளுடன் இருக்கும். அப்பொழுது ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று உள்ளே செல்லும். ஒரு வேளை இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்று ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தால் கொல்கத்தா அணி எளிதாக அடுத்த சுற்று சென்றடையும். ராஜஸ்தான் அணியின் அடுத்த போட்டி வெற்றி தோல்வி ஆனது கொல்கத்தா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பை பாதிக்காது.

பஞ்சாப் அணிக்கான வாய்ப்பு :

கொல்கத்தா அணிக்கு என்ன வாய்ப்பு உள்ளதோ, அதே வாய்ப்புகள் தான் பஞ்சாப்பிற்கும் உள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா தோற்க வேண்டும். அடுத்த போட்டியில் சென்னையை வீழ்த்த வேண்டும். இரண்டு போட்டியிலும் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதே போல தன்னுடைய கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் பெங்களூர் அணியை வீழ்த்தினாலும் தலா 14 புள்ளிகளுடன் இருக்கும்.  அப்போது ரன்ரேட்  அடிப்படையில் பஞ்சாப் அணி அடுத்த சுற்றில் நுழையலாம். ஒருவேளை ஹைதராபாத் தோல்வியடைந்தால் பஞ்சாப் அணி எளிதாக உள்ளே சென்றுவிடும். பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தான் அணி வெற்றி தோல்வியானது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

ராஜஸ்தான் அணிக்கான வாய்ப்பு :

ராஜஸ்தான் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஒரே ஒரு லீக் போட்டி மட்டும் தற்போது உள்ளது. ராஜஸ்தான் அணி பதினொரு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் உள்ளது. அந்த அணி டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் 13 புள்ளிகளை அடையும் அப்பொழுது அந்த அணி அடுத்த சுற்று செல்ல வேண்டுமெனில் தன்னுடைய கடைசி லீக் ஆட்டங்களில் விளையாடும் பஞ்சாப், ஐதராபாத், கொல்கத்தா அணி தோல்வியடைய வேண்டும். இந்த மூன்று அணிகளும் தோல்வியடைந்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று விட்டால் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். ராஜஸ்தான் அணி முன்னேறுவது பெங்களூரு, சென்னை, மும்பை அணிகள் கைகளிலேயே உள்ளது. 

இன்றைய வாழ்வா சாவா போட்டி: 

பஞ்சாப் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி 12 புள்ளிகளுடனும் தோல்வியடையும் அணி 10  புள்ளிகளுடன் இருக்கும். இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணியானது அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால், வெற்றி பெரும் அணி அடுத்த போட்டியில் தோல்வியடைந்தால்  தலா 12  புள்ளிகளுடன் இருக்கும். அதே போல ஹைதராபாத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்திலும், ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா அணிகள் தலா 12  புள்ளிகளுடன் களத்தில் நிற்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதனால் இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் அதிர்ஷ்டம் இருந்தால் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு அடுத்த சுற்று வாய்ப்பானது பிரகாசமாகவே உள்ளது. 

இறுதி லீக் ஆட்டம் வரை, ஏழு அணிகளும் அடுத்த சுற்றுக்கு மல்லுக்கட்டும் ஐபிஎல் தொடராக இந்த தொடர்தான் இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடுமையான ஒரு போட்டி நிறைந்த ஐபிஎல் தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது என்றே அனைவரும் குறிப்பிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl play off chance 4 team compete 1 place


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal