#IPL2023 : முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி.. குஜராத் டைட்டன்ஸ் வெற்றி.! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் இன்று தொடங்குகிறது. அதன்படி, நேற்று முதல் ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி கண்கவர் நிகழ்ச்சிகளுடன் கோலாகாலமாக தொடங்கியது.

இதில், நேற்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் (4பவுண்டரி & 9 சிக்ஸர்) 92 ரன்கள் குவித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி, ரஷித் கான் மற்றும் அல்சாரி ஜோசப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் அணியில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 36 பந்துகளில் (3பவுண்டரி & 3 சிக்ஸர்) 63 ரன்கள் குவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Gujarat Titans won by 5 wickets against Chennai super kings


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->