#IPL2023 : களைகட்ட தொடங்கிய ஐபிஎல் திருவிழா.. குஜராத் ஜெயன்ட்ஸ்  அணியின் ஜெர்சி அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது.

இதனிடையே ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் நடப்பாண்டுக்கான சீருடையை அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான குஜராத் ஜெயன்ட்ஸ்  அணியின் ஜெர்சியை அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இதில் கடந்தாண்டு குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Gujarat Titans jersey indroduce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->