#IPL2023 : சுப்மன் கில் அதிரடி சதம்..தொடரில் இருந்து வெளியேறியது பெங்களூர் அணி.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூர், ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல், டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 அணிகள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 நடைபெறும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் பெங்களூர் - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்துள்ளது. இதில் பெங்களூர் அணியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 61 பந்துகளில் (13 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர்) 101 ரன்கள் குவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்ததன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Gujarat get Victory with RCB


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->