#IPL2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்.? இன்று சென்னை- குஜராத் பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இதனையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற குவாலிஃபயர் 1 போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

பரிசுத்தொகை

இதில், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இறுத்திப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 13 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.

இதுவரை நேருக்கு நேர்

இதுவரை இவ்விரு அணிகளும் 4 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 போட்டிகளில் குஜராத் அணியும், ஒரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

மழை குறுக்கீடு

ஒருவேளை மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் லீக் போட்டியில் அதிக புள்ளி எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 final CSK vs GT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->