#IPL2023 : சென்னை - ஹைதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4  புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 21ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இதனையடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் தொடங்குகிறது. 

அதன்படி, காலை 9.30 மணி முதல் நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட்களை  ரசிகர்கள் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரூ.1500 இந்த டிக்கெட்கள் நேரடியாக மட்டும் விற்பனை செய்யப்படும். அதேபோல் 2000 மற்றும் 2500 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் நேரடி மற்றும் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படும்.

மேலும், 3000 மற்றும் 5000 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். அந்த வகையில் ஆன்லைன் டிக்கெட்களை பேடிஎம் அல்லது www.insider.in என்ற இணையதளம் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 CSK vs SRH match tickets sale on April 18


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->