#IPL2023 : CSK-வின் வெற்றி தொடருமா.? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 3 போட்டியில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதேபோல், ஹைதராபாத் அணி இதுவரை 5 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 2 போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை தொடக்கத்தில் பந்துவீச்சு சொதப்பிய நிலையில் தற்போது சிறப்பாக செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே, பதிரனா, தீக்ஷனா ஆகியோர் சிறப்பாக பந்து வீசுகின்றனர். பேட்டிங் பொறுத்தவரை சென்னை அணி மிகவும் பலமாக உள்ளது.

ஹைதராபாத் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தாலும், தற்போது சிறப்பான ஆட்டத்தை அவர்கள் இன்னும் வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.

பேட்டிங் பொருத்தவரை அதிரடி பேட்ஸ்மேன்கள் அடங்கிய ஹைதராபாத் அணி தேவையற்ற ஷாட்க்களால் எளிதாக விக்கெட்டுகளை பறிகொடுக்கின்றனர்.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமேயானால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்துவது என்பது கடினம். எனவே பலம் வாய்ந்த இரு அணிகள் இன்று மோதுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

இதுவரை இவ்விரு அணிகளும் 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 29th Match CSK vs SRH


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->