RCB Vs PBKS: சாலா கப்பையும் சல்லிசல்லியாக நொறுக்கிய பஞ்சாப்.. திணறிய பெங்களூர்.. இப்படியொரு தோல்வி.! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய (30/04/2021) தினத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது. இன்றைய போட்டியில், பெங்களூர் அணி வெற்றிவாகை சூடுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். 

பெங்களூர் அணி சார்பாக வி கோஹ்லி, டி பாடிக்கல், ஆர் பட்டிதர், ஜி மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், எஸ் அகமது, டி சாம்ஸ், கே ஜேமீசன், எச் படேல், எம் சிராஜ், ஒய் சாஹல் ஆகியோர் விளையாடுகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக கே.எல்.ராகுல், பி சிங், சி கெய்ல், என் பூரன், டி ஹூடா, எஸ் கான், ஆர் மெரிடித், ஆர் பிஷ்னோய், எம் ஷமி, சி ஜோர்டான், எச் பிரார் ஆகிய வீரர்கள் களமிங்குகின்றனர். 

இன்று டாஸை வென்ற பெங்களூர் அணி பீல்டிங் தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய தயாராகிய பஞ்சாப் அணி, ஆட்டத்தின் இறுதியில் 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் அடித்தது. இதனால் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது.

விராட் கோஹ்லி 34 பந்துகளில் 25 ரன்கள் அடித்து வெளியேற, படிக்கல் 6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து வெளியேற, ரஜட் 30 பந்துகளில் 31 ரன்கள் அடித்து வெளியேற, கிளன் 1 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேற, ஏ பி டிவில்லியர்ஸ் 9 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வெளியேற, சபாஷ் அகமது 11 பந்துகளில் 8 ரன்கள் அடித்து வெளியேற 15.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே பெங்களூர் அணி எடுத்திருந்தது. 

டேனியல் சாம்ஸ் 4 பந்துகளில் 3 ரன்கள் அடித்து வெளியேற, இறுதியில் கெய்ல் ஜேமிஷன் - ஹர்ஷல் படேல் ஜோடி களத்தில் இருந்தது. இறுதியாக 22 பந்துகளில் 82 ரன்கள் பெங்களூர் அணிக்கு தேவைப்பட்டது. ஏறக்குறைய பெங்களூர் அணி தோல்வியை தழுவ காத்திருந்தது. 19 ஓவரில் பெங்களூர் அணி 133 ரன்கள் அடித்திருந்த நிலையில், 6 பந்துகளில் 43 ரன்கள் தேவைப்பட்டது. 

கெய்ல் ஜேமிஷன் 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார். ஹர்ஷல் படேல் 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதி சமயத்தில் சிக்ஸ், ஃபோர் என பறந்தாலும் வெற்றி கிடைக்கவில்லை. இறுதி ஓவரை வீசிய மெரிடித் பேட்டிங் செய்த ஹர்ஷத்தின் பந்தில் அடி வாங்கி நொண்டும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக முகமது ஷமி வீசினார். இறுதியில் கெய்ல் ஜேமிஷன் - சிராஜ் ஜோடி களத்தில் இருந்தது. சிராஜ் 1 பந்தில் ரன்கள் எடுக்காமல் வெளியேறினார். இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியடைந்த நிலையில், பெங்களூர் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 RCB Vs PBKS Match RCB Loss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->