MI Vs RR: இறுதி நேரத்தில் பொளந்துகட்டிய பொல்லார்ட்.. வச்சி செய்த டி காக்.. மும்பை அணி வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினத்தில் இரண்டு போட்டி நடைபெறுகிறது. மாலை 3.30 மணியளவில் தொடங்கும் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. 

இந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக ஒய் ஜெய்ஸ்வால், ஜே பட்லர், எஸ் சாம்சன், எஸ் டியூப், டி மில்லர், ஆர் பராக், ஆர் தெவதியா, சி மோரிஸ், ஜே உனட்கட், சி சகரியா, எம் ரஹ்மான் ஆகியோர் களமிறங்குகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக கியூ டி கோக், ஆர் ஷர்மா, எஸ் யாதவ், கே பொல்லார்ட், எச் பாண்ட்யா, கே பாண்ட்யா, ஜே யாதவ், என் கூல்டர்-நைல், ஆர் சாஹர், ஜே பும்ரா, டி போல்ட் ஆகியோர் களமிறங்குகின்றனர். 

டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் செய்ய தயாராகியதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.

172 என்ற இலக்கை நோக்கியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக குவிண்டன் டி காக் - ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக தனது முதல் ஓவரை சேத்தன் சக்காரியா வீசினார். 6 ஓவர் முடிவில் மும்பை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 17 பந்துகளில் 14 ரன்கள் அடித்து வெளியேறி இருந்தார். 

ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தொடர்ந்து, களத்தில் டி காக் - சூரியகுமார் யாதவ் ஜோடி இருந்தது. சூரியகுமார் யாதவ் 10 பந்துகளில் 16 ரன்கள் அடித்து வெளியேறவே, மும்பை அணி 10.1 ஓவரில் 87 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, களத்தில் க பாண்டியா - டி காக் ஜோடி இருந்தது. டி காக் அடித்து ஆட மும்பை அணியின் ரன்களும் அதிரடியாக உயர தொடங்கியது. 16 ஓவரில் மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. 

க பாண்டியா 16.4 ஆவது ஓவரில் போல்ட் அவுட்டாகினார். 26 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேற, டி காக் - பொலார்ட் ஜோடி களத்தில் இருந்தது. இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 20 பந்துகளில் 26 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி இருந்தது. 16.4 ஓவர் வரை டி காக் 47 பந்துகளில் 64 ரன்கள் நடித்திருந்தார். 

டி காக் - பொலார்ட் ஜோடி இறுதி நேரத்தில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. டி காக் 50 பந்துகளில் 70 ரன்கள் அடித்திருந்த நிலையில், பொல்லார்ட் 8 பந்துகளில் 16 ரன்கள் அடித்தார். ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றியை அடைந்தது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 MI Vs RR Match 29 April 2021 MI Victory match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->