#BigBreaking || ஐபிஎல்.,லில் இனி 10 அணிகள்.! சற்றுமுன் BCCI அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் ஆமாதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய அம்சமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2 புதிய அணிகளை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தற்போது ஐ.பி.எல். தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் அணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.ஜி. உள்பட பல நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வந்தன.

வரும் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை செய்து வந்தாக தகவல்களை வெளியாகின.

இந்நிலையில், வரும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ சற்று முன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 2022 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 10 teams


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->