டெஸ்ட் கிரிக்கெட் || முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை.!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்சில் 219 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய மகளிர் அணி 406 ரன்களை குவித்த நிலையில் 3வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியால் வெறும் 261 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனை அடுத்து 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 4வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய மகளிர் அணி 2 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற 6 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றும், 2 போட்டிகள் ட்ராவில் முடிந்துள்ளது. ஹர்மன் ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி முதல்முறையாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian women team beat Australia for first time test cricket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->