5 டெஸ்ட் போட்டி : இந்திய அணியில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு, டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4வது டெஸ்ட் போட்டி முடிவில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி 10ம் தேதி (இன்று) மான்செஸ்டரில் தொடங்குகிறது.

இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளர் யோகிஷூக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்நிலையில் ,உடற்பயிற்சியாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், இந்திய வீரர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் வீரர்களுக்கு யாரும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதால், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian team corona release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->