சாதனையை தக்கவைப்பாரா கோலி?! தொடங்கியது போட்டி! டாசில் இந்தியா வெற்றி!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆரம்பித்துள்ளது. இதில், டி20 தொடரின் முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. பின்னர், டக்ஒர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது  பின்னர் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து, இறுதியில் இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. இந்திய அணி 17 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது.

இந்நிலையில் இன்று நடக்கும் இரண்டாவது போட்டி மெல்போர்னில் நடக்கிறது. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மீண்டும் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் கடந்த ஆட்டத்தில் ஆடிய அதே அணியே இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டாண்க்ளே நீக்கப்பட்டு நாதன் கவுல்டர் நைல் அணியில் இடம்பிடித்துள்ளார். 

தொடரை கைப்பற்ற இந்திய அணி இந்த போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 இருபது ஓவர் தொடர்களை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதனை தக்கவைக்க இந்த போட்டியை இந்தியா வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

English Summary

india won the toss and elected field second T20 against australia


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal