வரலாற்று சாதனையை படைத்த தோனி - கோலி! ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது!  - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியானது மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. 

இந்த தொடர் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நீண்ட வருட ஆதிக்கமானது, இந்திய அணியால் தகர்க்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணி இந்தியாவில் தொடர்ச்சியாக வென்ற 11 வது டெஸ்ட் தொடர் இந்த தொடர் ஆகும். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி, இரண்டு முறை தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவில் 10  டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற தொடருடன் இந்திய அணி அந்த சாதனையை சமன் செய்து இருந்த நிலையில், ஒரு வருடம் காத்திருந்து தற்போது ஆஸ்திரேலிய அணியின் சாதனையை இந்தியா தகர்த்தது. 

ஆஸ்திரேலியா இதற்கு முன்னதாக 1994ஆம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 10 உள்நாட்டு தொடர்களில் கோப்பையை கைப்பற்றியிருந்தது. அதேபோல அதன்பிறகு 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 10 தொடர்களில் கோப்பையை கைப்பற்றியது. இந்த சாதனையை இந்திய அணி தற்போது 2013ம் ஆண்டு முதல் தற்போதைய தென்னாபிரிக்க தொடர் வரை 11 தொடர்களிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது. இந்த தொடர் வெற்றி இந்திய அணியின் 11வது தொடர்ச்சியான வெற்றியாகும். 

இந்த காலகட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி முதன்மையாக வழிநடத்தி நிலையில் ஒரே ஒரு தொடரில் மட்டும் ஆப்கனிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியை அஜிங்கிய ரஹானே வழிநடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில்  ஆஸ்திரேலிய தொடரின் போது இறுதிப் போட்டியுயையும் ரஹானே வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013இல் தோனி கேப்டனாக கொண்டு தொடங்கிய பயணம் தற்போது 2019 இல் விராட் கோலியின் தலைமையில் தொடரும் போது ஆஸ்திரேலியன் சாதனையை இந்தியா தகர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india won 11 home series continuously with world record


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->