விறுவிறுப்பான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி! - Seithipunal
Seithipunal


முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் நான்கு விக்கெட்டுகள்!

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் சூப்பர் 12க்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்களும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று விளையாடியது. ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்பெயின் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் கே.எல் ராகுல் 33 பந்துகளில் 57 ரன்களும், சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கேன் ரிசர்ட்சன் 30 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிச்சல் மார்ஷ் மற்றும் ஆருண் பின்ச் நல்ல தொடக்கத்தை தந்தனர். இந்த இணை 5.4 ஓவரில் 64 ரன்கள் குவித்து இருந்தது. மிச்சல் மாஸ் 35 ரன்கள் எடுத்திருந்த போது புவனேஸ்வர் குமார் பந்தில் அவுட் ஆனார். களத்தில் நின்று விளையாடிய ஆருண் பின்ச் 54 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்ததால். 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை முகமது ஷமி வீச வந்தார். கடைசி ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு ரன் அவுட் உட்பட நான்கு விக்கெட்டைகளை முகமது ஷமி வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India win in thrilling practice match against Australia


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->