3வது டி20 போட்டி: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்..ருதுராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு.? - Seithipunal
Seithipunal


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிறது.

இதில், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து  நடைபெற்ற இரண்டு டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு 3வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்ய முனைப்பு காட்டும். அதே அளவில் ஒரு வெற்றி கூட பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியாவது பெற போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.

அதேபோல் இன்றைய போட்டியில் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் இன்று அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில இளம் வீரர்களும் என்று அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India vs West Indies 3rd T20 today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->