இன்றைய இந்திய - நியூசிலாந்து போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு.? - Seithipunal
Seithipunal


உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி அணியும், நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் இன்று மோதுகிறது. 

இந்தியா பலம்வாய்ந்ததாக பேட்டிங் வரிசையை கொண்டிருந்தாலும் பயிற்சி போட்டியின்போது நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இதுவரை இரு அணிகளும் உலக கோப்பை தொடர்களில் 8 போட்டிகளில் மோதியுள்ளது. அதில் இந்திய அணி 3 முறையும், நியூசிலாந்து அணி 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மட்டும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

1975 உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. 

1979 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 

1987 உலக கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது. 

1987 உலக கோப்பையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 

1992 உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. 

1999 உலகக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. 

2003 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது. 

2019 உலகக்கோப்பை மழை காரணமாக நியூசிலாந்து - இந்திய அணி போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று அரையிறுதி சுற்றியில்  நியூசிலாந்து - இந்திய அணியும் மோதுகிறது. இதில் யார் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india vs newzealand team win the match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->