இந்தியா - அயர்லாந்து டி20 தொடருக்கான அட்டவணை வெளியீடு.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா அயர்லாந்து அணிகளுக்கிடையான டி20 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இதுகுறித்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கையில், ஒரே வருடத்தில் இந்திய அணி இரண்டாவது முறையாக அயர்லாந்துக்கு வந்து போட்டிகளில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் அட்டவணை பிசியாக இருக்கும் இந்த தருணத்திலும் அயர்லாந்து அணியுடன் டி20 போட்டிகளில் விளையாட அனுமதி அளித்த பிசிசிஐ-க்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த முறை இந்திய அணி அயர்லாந்தில் 2 டி20 போட்டிகளில் விளையாடியது இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அனைத்து டிக்கடுகளும் விற்று தீர்ந்தது. ரசிகர்கள் கொடுத்த பேராதரவின் காரணமாக தற்போது மூன்று டி20 போட்டிகளை நடத்த உள்ளோம். மேலும் இந்த தொடர் அயர்லாந்து ரசிகர்கள் மறக்க முடியாத படி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா அயர்லாந்து அணிகள் மோதும் மூன்று டி20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதியும், 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 2ஆம் தேதியும், 3வது டி20 போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த டி20 தொடருக்கு ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் என கூறப்படுகிறது. மேலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இந்த டி20 தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உலக கோப்பைக்கு ஒரு அணி தயாராகி வரும் நிலையில், இந்த தொடருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ், திலக் வர்மா சர்மா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India tour of Ireland T20 series shedule


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->