இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணியில் பும்ரா, கோலி மீண்டனர்; கேப்டனாக சுப்மன் கில் தேர்வு!
India Tour of England Bumrah Kohli Return to ODI Squad Shubman Gill Named Captain
இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 19 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்தொடருக்கான அதிகாரப்பூர்வ ஒருநாள் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று முறைப்படி அறிவித்துள்ளது.
இந்த அணியில் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பது இந்திய அணிக்குக் கூடுதல் பலத்தை அளித்துள்ளது. எனினும், தற்பொழுது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் விராட் கோலி, இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்குள் முழு உடற்தகுதியை எட்டினால் மட்டுமே போட்டிகளில் களமிறங்குவார் என்று பிசிசிஐ நிபந்தனையுடன் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
இந்த இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு இளம் அதிரடி ஆட்டக்காரர் ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவ வீரர் ரோஹித் சர்மாவும் அணியில் இடம்பெற்றுள்ளார். பிசிசிஐ அறிவித்துள்ள முழு அணி விவரம் பின்வருமாறு:
பேட்டர்கள் & கீப்பர்கள்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன்.
ஆல்-ரவுண்டர்கள் & ஸ்பின்னர்கள்: வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, குல்தீப் யாதவ்.
வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார்.
அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி:
மறுபுறம், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய டி20 அணியையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த இளமை துடிப்புள்ள டி20 அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக செயல்பட உள்ளார்.
டி20 அணி விவரம்: ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா, நிதிஷ்குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி, பிரசித் கிருஷ்ணா.
இந்த இரண்டு தொடர்களுக்கான தேர்வில் இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 7 வீரர்கள் இருவகை வடிவங்களிலும் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக, இங்கிலாந்து மண்ணில் பும்ராவின் வேகமும், கோலியின் அனுபவமும் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணியாக அமையும் என விளையாட்டு விமர்சகர்கள் கருதுகின்றனர்.
English Summary
India Tour of England Bumrah Kohli Return to ODI Squad Shubman Gill Named Captain