IND vs SL : முதல் டெஸ்ட் போட்டி.. இந்திய அணியின் உத்தேச பட்டியல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் இன்று தொடங்குகிறது. 

ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியாகும். தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக  ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்திய அணி கடைசியாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டி விளையாடுவது. அதில் 1 - 2 என்ற கணக்கில் தொடரை  இழந்தது. இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக நியூசிலாந்துடன் டெஸ்ட் போட்டி விளையாடுவது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவியில் இந்த டெஸ்ட் போட்டி எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே போல விராட் கோலிக்கும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் விராட் கோலிக்கும் 100வது டெஸ்ட் போட்டியாகும். 

இந்திய அணியின் உத்தேச பட்டியல் : 

ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹனுமா விஹாரி அல்லது சுப்மான் கில், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் அல்லது ஜெயந்த் யாதவ் அல்லது குல்திப் யாதவ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs sl first test


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->