வாழ்வா? சாவா? போட்டியில் இந்திய அணி.. இந்தியா-தென்னாபிரிக்கா 2வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்று கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா தென்னாபிரிக்கா மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும். அதனால் இந்திய அணி இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டியுள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி ;

ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ்

எதிர்பார்க்கப்படும் தென் ஆப்ரிக்கா அணி ;

ஜனேமன் மாலன், குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SA 2nd ODI today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->