இமாலய ரன் குவித்த இந்திய அணி! மரண அடி அடித்த சஞ்சு, சூர்யா, பாண்டியா, பராக்! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி மரண ஆட்டம் ஆடி, 297 ரன்களை குவித்து, சர்வதேச டி20 ஆட்டங்களில் அதிகபட்ச ரன்களை எடுத்த அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியுடன், டெஸ்ட் மட்டும் டி20 ஆட்டங்களை இந்தியா ஆடி வருகிறது. 

இதில் ஏற்கனவே டெஸ்ட் ஆட்டங்கள் முடிந்த நிலையில், தற்போது டி20 தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

தொடரை ஏற்கனவே இந்தியா கைப்பற்றிய நிலையில், இன்றைய மூன்றாவது ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 8 சிக்சர், 11 பவுண்டரி உட்பட 111 ரன்களை எடுத்து அசத்தினார். 

சூரியகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்சர், எட்டு பவுண்டரிகள் உட்பட 75 ரன்கள், ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்கள், ஹார்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரங்களும் குவித்து அசத்தினர். 

அதிரடி ஆட்டுக்காரரான அபிஷேக் சர்மா 4 ரன்கள், நித்திஷ் குமார் ரெட்டி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
 
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 297 ரன்களை குவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs ban t20 1 innings 297


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->