#BREAKING || சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய அணி.! ஆல் அவுட்.! சம்பவம் செய்த லுங்கி நிகிடி.! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது. 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 272 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளது. கே எல் ராகுலும், அஜிங்கிய ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்றைய ஆட்டம் அரைமணிநேரம் முன்னதாகவே தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கே எல் ராகுல் 123 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து ரஹானே 48 ரன்னுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிக்கிஸில் அனைத்து விக்கட்களையும் இழந்து, 327 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்க வீரர் லுங்கி நிகிடி அசத்தலாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்தார். ரபடா 3 விக்கெட்களை வீழ்த்தியனார்.

இதனையடுத்து தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND V SA BOXING DAY TEST IND 1ST INNINGS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->