#BigBreaking || அசத்தும் இந்திய அணி.! அனைத்து விக்கெட்களும் காலி.! முடிந்தது முதல் இன்னிங்ஸ்.! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியது. 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 272 ரன்களுடன் வலுவான நிலையில் இருந்தது. கே எல் ராகுலும், அஜிங்கிய ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 2வது நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்றைய ஆட்டம் அரைமணிநேரம் முன்னதாகவே தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கே எல் ராகுல் 123 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து ரஹானே 48 ரன்னுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிக்கிஸில் அனைத்து விக்கட்களையும் இழந்து, 327 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்க வீரர் லுங்கி நிகிடி அசத்தலாக பந்து வீசி 6 விக்கெட்களை சாய்த்தார். ரபடா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நான்குபேரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 32 ரன்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அடுத்த ஜோடி சேர்ந்த பவுமா - குவின்டன் டி காக் தென்ஆப்பிரிக்க அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருந்தபோதிலும் பவுமா 52 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, குவின்டன் டி காக் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 197 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை விட 130 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு நாள் ஆட்டங்கள் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND V SA BOXING DAY TEST 1ST INNINGS


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->