செமி பைனலில் செம்ம டிவிஸ்ட் வைத்த ஐசிசி! - Seithipunal
Seithipunal



இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. 

இந்த அட்டவணைப்படி வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

இறுதிப்போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது முதல் லீக் ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம், வருகின்ற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி குஜராத் நரேந்திர மோடி மைத்தனத்தில் நடக்க உள்ளது

அரை இறுதி ஆட்டங்களை பொறுத்தவரை கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெற உள்ளன். இந்த அட்டவணையில் ஐசிசி டிவிஸ்ட் ஒன்றை வைத்துள்ளது. 

அதன்படி, பாகிஸ்தான அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால், அந்த அணி கொல்கத்தாவில் விளையாடும்.
இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறினால் அந்த ஆட்டம் மும்பையில் நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வேளை அரையிறுதியில் இந்திய அணியும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோத நேரிட்டால், அந்த ஆட்டம் கொல்கத்தாவில் தான் நடைபெறும் என்று ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 semi Final importent Info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->