பெரும் காயத்தில் ஹர்திக் பாண்டியா!! பேட்டிங் செய்வதிலும் சிக்கலா? இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் 17 வது ஆட்டத்தில் இந்தியா அணி வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதனை தொடர்ந்து களம் இறங்கிய வங்கதேச அணியின் துவக்க ஆட்டக்கார்களான தன்சிக் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இணை பொறுப்புடன் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் குவித்தது. 

வங்கதேச அணியின் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறிய நிலையில் 15 வது ஓவரை வீச வந்த குல்தீப் யாதவ் தன்சிக் ஹசன் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த நிலையில் முன்னதாக 9வது ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியா தனது 4வது பந்தை வீச வந்தபோது தடுமாறி கீழே விழுந்ததில் அவரின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்திலேயே வலியால் துடித்தார். 

இதனைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மைதானத்தில் இருந்து சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டதால் 9வது ஓவரில் மீதம் இருந்த 3 பந்துகளை விராட் கோலி வீசினார்.

தற்போது வரை ஹர்திக் பாண்டியா களமிறங்காததால் அவர் நேரடியாக இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நேரடியாக அவர் களமிறங்க வேண்டுமென்றால் இந்திய அணி தனது இன்னிங்சை தொடங்கி 120 நிமிடங்களுக்கு பிறகு அல்லது 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு மட்டுமே அவரால் விளையாட முடியும் என்பது விதிமுறையாகும்.

மிடில் ஆர்டருக்கும் வலு சேர்க்கும் வகையில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதால் அவருடைய இடம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் அவர் கூடிய விரைவில் குணமடைவார் என இந்திய அணியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். காயத்திலிருந்து ஹர்திக் பாண்டியா குணமடையாமல் போனால் அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச அணி தற்போது வரை 24 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை சேர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harthik Pandya is doubtful to play due to injury


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->