இராண்டாவது திருமணம் செய்யப்போகும் ஹார்டிக் பாண்டியா.?!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக இருப்பவர் ஹர்திக் பாண்டியா. இவர் பாலிவுட் நடிகையான நடாஷாவை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டு குடும்பத்தினர் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அடிக்கடி இவர்களது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். 

அவருக்கு ஏற்கனவே நடாஷாவுடன் திருமணம் ஆன நிலையில் தற்போது மீண்டும் நட்டாஷாவை இரண்டாவது முறை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று கூறப்படுகிறது. காதலர் தினமான நாளை அவர்களது திருமணம் நடக்க இருக்கிறதாம்.

பிப்ரவரி 14-ஆம் தேதியை சிறப்பாக கொண்டாடும் வகையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதைப்போரில் நடக்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் மும்பரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணமானது இரண்டு விதமான திருமண முறைகளில் நடக்கும் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு, ஏற்கனவே அகஸ்தியா என்ற ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் பல்வேறு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்ள இருக்கின்றனராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hardin pandya marriages again


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->