கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்னா.. ஆப்பு வெச்சது தல தோனி  - ஹர்பஜன் சிங் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய ரகானே 29 பந்துகளில் 71 ரன்களும், ஷிவம் தூபே 21 பந்துகளில் 50 ரன்களும் குவித்தனர்.

அதனைத் தொடர்ந்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "இந்த உலகத்துல ஒன்னை விட ஒன்னு பெட்டரா தான் இருக்கும். ஆனா எப்பிடி ரூம் போட்டு யோசிச்சு பாத்தாலும் இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் டீம்., அவங்களோட தோனியை  விட பெட்டரா ஒன்னு இல்லப்பா. கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்னா. ஆப்பு வெச்சது தல தான்." என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harbhajan Singh tweet about CSK victory against KKR


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->