துருக்கியில் இடிபாடுகளில் சிக்கி பிரபல கால்பந்து வீரர் மரணம்.!  - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் இந்த மாதம் நடைபெற்ற பயங்கரமான நிலநடுக்கத்தில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மீட்புப் பணிகளில் கானா நாட்டைச் சார்ந்த பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி  பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பிரிக்டர் அளவுகோலில்  7.8 ஆக பதிவாகி இருந்தது. ஒரே நாளில் மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த நாடுகளே உருகுலைந்து போயின. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன . 

ஏராளமானோர் சடலங்கலாகவும் உயிரோடும் தினமும் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த  நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்கு பகுதியும்  கடுமையாக பாதிக்கப்பட்டன. மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை   துருக்கியில் 39,672 பேரும்    சிரியாவில் 5800 பேரும் பலியாகி உள்ளனர் . பூகம்பம் நடந்து 11 நாட்களாகியும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கானாவை சார்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியன் அட்சு துருக்கிக்கு வந்திருந்தார். அவர் இந்த நிலநடுக்கத்தில் மாயமானதாக தகவல்கள் வெளியாகின. இவர் விரைவில் நலமுடன் திரும்ப வேண்டும் என உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள்  பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மீட்பு பணிகளின் போது இவர் சடலமாக மீட்கப்பட்டதாக செல்சி கால்பந்து அணியின் மேலாளர் முராத் தெரிவித்துள்ளார். 

மேலும் இதுபற்றி கூறியுள்ள அவர்  கட்டிட இடைபாடுகளில் இருந்து  கிறிஸ்டியன் அட்சுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அவரது செல்ஃபோனும்  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்னும் அந்தக் கட்டிட இடுப்பாடுகளில் ஏராளமான உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. துருக்கி நிலநடுக்கத்தில் கால்பந்து வீரர் உயிரிழந்த சம்பவம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ghana and chelsea winger christian atsu died in turkey earth quake today his remains recovered from the debris


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->