உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதற்கான காலம் இது - கிளைவ்லாயிட்.! - Seithipunal
Seithipunal


இந்திய அணி உள்ளூர் மற்றும் வெளியூர் தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும் ஐசிசி தொடர்களில் கோட்டை விட்டு விடுகிறது. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.

இதில், சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதன் பிறகு இந்திய அணியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் அணி வீரர்களின் தேர்வில் கவனம் தேவை எனவும் சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கிளைவ் லாயிட் பேசியதாவது, எங்களது காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பிரபலமாக இருந்தாலும் உண்மையான மதிப்பு எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், தற்போது பல்வேறு டி20 தொடர்கள் வந்துவிட்டது. அதில் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களது வாழ்க்கைக்கு தேவையான நிறைய பணம் சம்பாதிக்கின்றனர்.

 இது ஒரு அற்புதமான வாய்ப்பு வீரர்கள் பணம் சம்பாதிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. கால்பந்தில் பல முன்னணி வீரர்கள் பல கோடிகளில் சம்பாதிக்கின்றனர். கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதில் மட்டும் ஏன் கேள்விகள் எழுகிறது. ஆனால் டி20 தொடர்களில் விளையாடுவது சொந்த நாட்டிற்கு ஆபத்தாக அமைந்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து.

அதாவது வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் 50 லட்சம் பேர் மட்டுமே மொத்தமாக இருக்கின்றனர். அதில் சிறந்த 20 வீரர்களை உருவாக்குகிறோம். ஆனால், 10 பேர் மட்டுமே நாட்டுக்காக விளையாடுகின்றனர். மீதமுள்ள 10 வீரர்கள் வெளிநாடுகளில் உள்ள டி20 தொடர்களில் விளையாடி வருகின்றனர். அடுத்த 10 வீரர்களை உருவாக்குவதற்குள் இந்த 10 வீரர்கள் மாறி விடுகிறார்கள் இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தால் வீரர்கள் பற்றாக்குறையில் கிரிக்கெட் இல்லாமல் போய்விடும் அது நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஐசிசி தொடர்களில் இந்தியாவின் 10 ஆண்டு கனவு விரைவில் நிறைவேறும் மீண்டும் உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதற்கான காலம் இது. ஐபிஎல் போட்டிகளால் இந்திய அணியின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex Westindies cricketer speech about Indian cricket team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->