#IPL2022 : டெல்லி அணியின் உதவி பயிற்சியாளராக.. முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் இதுவரை ஐபிஎல்லில் ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் வீரராக விளையாடியுள்ளார். இதில் 2018 சிஎஸ்கே அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் 2020 நவம்பரில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பணியாற்றுகிறார். மேலும், அந்த அணியில் பிரவீன் ஆம்ரே, அஜித் அகர்கர் ஆகியோர் உதவி பயிற்சியாளராகவும், ஜேம்ஸ் ஹோப்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் உள்ளனர். இந்த நிலையில் டெல்லி கேப்பிடல் அணியின் மற்றொரு உதவி பயிற்சியாளராக ஆஸ்திரேலியா மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ex Australian cricketer Shane watson assistant coach of Delhi capitals


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->