நண்பேன்டா! காயத்துடன் பேட்டை தூக்கி வந்து நின்ற துணிச்சல்! வீரநடை போட்டு பைனலுக்கு செல்லும் இந்தியா!   - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற இலங்கை நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது ஐந்தாவது நாள் இறுதிக்கட்டத்தில் பரபரப்பான நிலையில் நியூசிலாந்து வெற்றிக்கனியை எட்டி பறித்திருக்கிறது. அதுவும் இறுதிப்பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில், இரண்டு முனைகளிலும் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியது என ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா, இலங்கை அணிகள்  போட்டியிட்டு வந்தன. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது அணியாக யார் தகுதி பெறுவது என்பதில் இந்தியா இலங்கை அணிகள் இடையே போட்டி நிலவியது. 

தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால், நியூசிலாந்து இலங்கை டெஸ்ட் தொடரின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அதாவது இந்தியா டிரா செய்தாலோ அல்லது தோல்வியடைந்தாலோ, இலங்கை நியூசிலாந்தை 2 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தினால், இலங்கை பைனலுக்கு மற்றொரு அணியாக முன்னேறலாம் என்ற நிலையே நிலவியது.  

அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியானது டிராவை நோக்கியே நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கை நியூசிலாந்து அணியின் போட்டிகளின் முடிவானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. நேற்று நான்காம் நாள் ஆட்டம் நேரம் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழந்து 28 ரன்கள் எடுத்திருந்தது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நியூசிலாந்து வெற்றி பெறலாம், இலங்கையும் வெற்றி பெறலாம் அல்லது சமனிலும்  முடியலாம் என்ற நிலையில் தொடங்க இருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் உணவு இடைவேளை வரை தொடங்கப்படவே இல்லை. 

மழை விட்ட பிறகு ஆடுகளம் சரி செய்யப்பட்டு, 53 ஓவர்கள் மட்டுமே வீசப்படும் என அறிவிக்கப்பட்டு ஆட்டமானது தொடங்கியது. ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் நியூசிலாந்து ஆடினாலும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டே இருந்தனர். தங்கள் பங்களிப்பை நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அளித்து வந்தனர். டாம் லதாம் 24 ரன்களிலும்,  நிக்கோலஸ் 20 ரன்களிலும் ஆட்டம் இழக்க, வில்லியம்சன் ஒரு பக்கம் நின்று நங்கூரமாக ஆடிக் கொண்டிருந்தார்.  மறுமுனையில் வந்த டேரல் மிச்சல் ஒருநாள் போட்டிகளைப் போல அதிரடியாக விளையாடி 81 ரன்களை குவித்து நியூசிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற நிலையை உருவாக்கினார். 

257 ரன்கள் 53 ஓவர்களில் எடுப்பது கடினம் என கருதப்பட்ட நிலையில், வில்லியம்சன் சதத்துடன் 122 ரன்கள் எடுத்து களத்தில் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தார். இறுதி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் இரண்டு பந்துகளில் தலா 1 ரன்கள் வீதம் எடுக்க, 3 ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து இரண்டாவது ரன்னுக்கான முயற்சியில் ஹென்றி ரன் அவுட்டானார். இறுதி 3 பந்துகளில் 5 ரன்களை எடுக்க வேண்டும் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே என்ற இக்கட்டான நிலை உருவானது.

இந்த நிலையில் தான் இந்த போட்டியில் பந்துவீசும் போது காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் துணிச்சலாக களமிறங்கினார். காயம் காரணமாக நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது விக்கெட் விழுந்த போதே பேடை கட்டி களமிறங்க தயாரான அவர் துணிச்சல் அவருக்கு பாராட்டை பெற்றுக் கொடுத்துள்ளது. 

மேலும் நான்காவது பந்தில் வில்லியம்சன் பவுண்டரி அடிக்க, இறுதி 2 பந்தில் 1 ரன் என்ற சூழல் உருவானது, ஐந்தாவது பந்தை அசிதா பெர்னான்டோ சிறப்பாக வீசி ரன் கொடுக்கவில்லை. ஆறாவது பந்தையும் சிறப்பாக வீசி பேட்ஸ்மேனை ஏமாற்றிவிட்டார். ஆனால் பைஸ் வகையில் வாக்னர், வில்லியம்சன் அந்த ரன்னை எடுத்துவிட்டனர். ஒரு ரன் தேவை என்ற நிலையில், இரண்டு முனைகளிலும் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியது என ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. 

நியூசிலாந்து வெற்றி பெற்றதால் இந்தியா பைனலுக்கு முன்னேறிவிட்டது. இதன்மூலம் அஹமதாபாத் போட்டியை இந்தியா டிரா செய்து தொடரை வென்றாலே போதும் என்ற சூழல் உருவாகியுள்ளது. முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியாவை நியூசிலாந்து அணிதான் தோற்கடித்து, வெளியேற்றியது. தற்போது அதே நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்தி, இந்தியாவை இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆடாமலே ஜெயிச்சோமடா என பாடிக்கொண்டே இந்திய அணி லண்டன் செல்ல தயாராகிவிட்டது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆனது இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா ஆடுவதும் உறுதியாகிவிட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

everyone wishes to Neil wagner who played with injury for team victory


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->