ENG vs IND : பண்ட் மற்றும் பாண்டியாவின் சரவெடியால், ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்தியா.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாடி, 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஒருநாள் தொடரை 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 

இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார், அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. ஜேசன் ராய் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். பேட்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவு ஆக்கினார். பென் ஸ்டோக்ஸ் 27 ரன்னுக்கு வெளியேறினார்.

தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாஸ் பட்லர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 34 ரன்னும், லிவிங்ஸ்டோன் 27 ரன்னும், டேவிட் வில்லி 18 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.  இங்கிலாந்து அணி 45.5 ஓவர் முடிவில் 259 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்களும், ஜடேஜா விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தவான் ஒரு ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 17 ரன்களில் வெளியேறினார். கோலி 17 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி  தொடக்கத்தில் தடுமாறியது. 

அதன்பின் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஜோடி ரன்களை குவிக்க தொடங்கியது. ஹர்திக் பாண்ட்யா 55 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட், ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி 42.1 ஓவர் முடிவு 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட், 113 பந்துகளில்125 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ENG vs IND Series India Win


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->