இந்தியாVSபாகிஸ்தான் கோப்பைக்கான வெறித்தனமான ஆட்டம்! உச்சகட்ட பரபரப்பில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வருடம் சிறப்பான ஒரு வருடமாக அமைந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக மோதக்கூடிய ஆட்டங்கள் அடுத்தடுத்து வரிசையாக வர இருக்கின்றன. 

ஆசிய கோப்பை, உலக கோப்பை தொடர்களில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோத உள்ள நிலையில்,  நாளை இந்தியா-பாகிஸ்தான் A அணிகள் மோதும் இறுதி ஆட்டம் ஒன்று நடைபெற இருப்பது இரு நாட்டு ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. நாளை இந்த தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடருக்கான லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான அரை இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும், இலங்கை அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 322 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக உமர் யூசப் 88 ரன்கள் குவித்தார். 

இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 262 ரங்களுக்கே அணைத்து விக்கெட்களையும் இழந்து படு தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதேபோல் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், பங்களாதேஷ அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி, 49.1 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 211 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக யாஷ் துல் 66 ரன்னும், அபிஷேக் ஷர்மா 34 ரன்னும் எடுத்தனர்.

இதனை அடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி, 34.2 ஓவர்களில் அனைத்து விக்கடுகளையும் இழந்து, 166 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் நிஷாந்த் சந்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

நாளை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை நடைபெற உள்ளது.

இந்த தொடரை பொறுத்தவரை ஏற்கனவே லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. அதே நம்பிக்கையில் பாகிஸ்தானியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று, இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 

அதே சமயத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான அணி, அதற்கு பதிலடி கொடுத்து, கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த முறை களமிறங்கும்.

இந்த இரு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல், அனல் தெறிக்க நடக்கும் என்பதில் ஐயமில்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emerging Asia Cup 2023 final IND vs PAK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->