கேரளா | ஒரே நாளில் 3 பேர் உயிரை எடுத்த வெப்ப அலை.! - Seithipunal
Seithipunal


கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் அதிகரித்து உள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில் கேரள மாநிலத்தில் பாலக்கோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேல் உள்ளது. 

வெப்பநிலை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் மாநிலங்களில் கேரளா இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிக வெப்பநிலை காரணமாக உயிர்பலி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். 

அதனை தொடர்ந்து பொது இடங்களுக்கு வந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் இரண்டு வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டயம் பகுதியில் ஷமீர் (வயது 35) என்பவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்தார். 

அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷமீர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். வெயில் காரணமாக ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Heat wave 3 died


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->