புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கும் எலன் மஸ்க் முடிவு!  - Seithipunal
Seithipunal


நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலக பெரும் பணக்காரராரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை சமீபத்தில் கைவிட்டார். டுவிட்டரில் உள்ள போலி கணக்கு விவரங்கள் குறித்த தரவுகள் இல்லை என கூறி இந்த ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்டார். 

டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் எலான் மஸ்க் இங்கிலாந்தின் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போவதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,

"தெளிவாகச் சொல்வதானால், நான் குடியரசுக் கட்சியின் இடது பாதியையும் ஜனநாயகக் கட்சியின் வலது பாதியையும் ஆதரிக்கிறேன் இந்த பதிவை தொடர்ந்து சில நிமிடங்களிலே மற்றொரு பதிவில் நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போகிறேன்" என அறிவித்துள்ளார்.

தற்போது இந்த பதிவு பல லட்சம் லைக்குகளை குவித்து வருகிறது. மான்செஸ்டர் யுனைடெட் உலகின் தலைசிறந்த கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றாகும். இந்த அணியில் கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon Musk buy Manchester United football club


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal