ஹர்டிக் பாண்டியவை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்.! முன்னாள் கிரிக்கெட் வீரர் அறிவுரை.!! - Seithipunal
Seithipunal


ஹர்டிக் பாண்டியாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட வேண்டாம் என்றும் அவரை இயல்பாக விளையாட விடுங்கள் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவர்கள் கூறியுள்ளார்.

அவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக உருவெடுக்க  வேண்டும் என்று விரும்புகிறேன் அவர் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் என்னை போல் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வரவேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இப்போது ஆல்ரவுண்டர் என்ற அந்தஸ்தை எட்டுவதற்கு பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பந்துவீச்சில் அவரால் முன்னேற்றம் காண முடியும் என நம்புகிறேன்.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் காயம் அடைந்தது மிகுந்த வருத்தத்திற்குரியது. கிரிக்கெட் போட்டியில் காயம் என்பது இயல்பான ஒன்றுதான் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு பதிலாக வரும் வீரர்கள்  நன்றாக ஆடுவார் என நம்புகிறேன்.

இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது. பொதுவாக பேட்டிங்கிற்கு 60 சதவீதம் சாதகமாக இதுக்கும் ஆனால் தற்போது  80 சதவீதம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது வருத்தமளிக்கிறது என கூறினார்.  

இந்திய லெவன் அணியை நான் தேர்வு செய்தால் அதில் யுவராஜ் சிங்கிற்கு நிச்சயம் இடம் கொடுத்து இருப்பேன். முறையான பிரிவு உபசார போட்டியில் விளையாட அவர் தகுதியானவர் அவர் போன்ற வீரர்கள் கடைசி போட்டியில் விளையாடி விட்டு ஓய்வு அறிவிப்பு வெளியிட விரும்புகிறேன் எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do not compare Hurdik Pandya with others. advocate former cricketer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->