தினேஷ் கார்த்திக் அறிவித்த டி20 ஆல் டைம் இந்திய லெவன் அணி!
dinesh karthik dream t20 team
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளராக பணியாற்றி வரும் தினேஷ் கார்த்திக், டி20 உலகக்கோப்பைக்கான ஆல் டைம் இந்திய லெவன் அணியை அறிவித்துள்ளார்.
இம்முறையில், தற்போதைய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு இடம் வழங்கப்படவில்லை. அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் எம்எஸ் தோனியை தினேஷ் கார்த்திக் தேர்வு செய்துள்ளார்.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் நடுப்பகுதியில் இடம்பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் பிரிவில் யுவராஜ் சிங், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்களில் ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வாகியுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளனர்.
தினேஷ் கார்த்திக் அறிவித்த டி20 ஆல் டைம் இந்திய லெவன் அணி:
ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
English Summary
dinesh karthik dream t20 team