#IPL2022 : வார்னர், ரோவ்மன் பவல் அதிரடி ஆட்டம்.. ஐதராபாத்தை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹைதராபாத் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், சீன் அப்பாட், ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக மார்க்கரம் 42 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 62 ரன்களும் எடுத்தனர். டெல்லி பந்து வீச்சில் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், மிச்செல் மார்ஸ், குல்தீப் யாதவ், நோர்க்கயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi capitals won by 21 runs against sunrisers Hyderabad


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->