அப்படி ஒரு அபாரமான பந்துவீச்சு... டேவிட் வார்னர் புகழ்ந்து தள்ளிய இந்திய வீரர்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணியானது ஆரோன் பிஞ்ச் தலைமையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விலடவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்திய அணி விராட்கோலியன் தலைமையில் இம்மாதத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 2 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 2 - 1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது. 

இந்த நம்பிக்கையுடன் இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் உலககோப்பைக்கு பின்னர் களம்காணும் முதல் போட்டியாக இது இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து போட்டிக்கு எதிரான தொடரினை வெற்றிபெற்ற உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி களம்கண்டு வருகிறது. இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை உருவாகியுள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் சார்பாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிசப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சாமி, பும்ரா ஆகியோரும் விளையாடுகின்றனர். 

ஆஸ்திரேலிய அணியின் சார்பாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மரன்ஸ் லபுஸ்சாக்னே, ஸ்டீவன் ஸ்மித், அஷ்டின் டர்னர், அலெக்ஸ் காரே, அஸ்டோன் அகர், பட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா  ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது. இதன் மூலமாக இந்திய பேட்டிங் செய்து வந்த நிலையில், 49.1 ஓவர்களின் முடிவில் 255 ரன்கள் எடுத்து இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி துவக்கியுள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களாக துவக்கத்தில் களமிறங்கிய டேவிட் வார்னர் - ஆரோன் பின்ச் ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 258 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் பும்ராவின் பவுன்சர் மற்றும் ஆக்கர் பந்து வீச்சுகளை கண்டு பெரும் வியப்பிற்கு உள்ளானேன் என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ப்ரெட் லீ பவுண்டரி லைனில் ஓடிவந்து சுமார் 150 கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடிய ஒருவரை நான் நினைத்து கூட பார்த்ததில்லை. பும்ராவிடம் அதிகளவு திறமை இருக்கிறது. ஆக்கர் மற்றும் பவுன்சர் என்னை பெருமளவில் வியக்க வைத்தது என்று கூறியுள்ளார். மேலும்., இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 17 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

david warner speech about bumrah


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->