காயம் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் கிரிக்கெட் வீரர்கள்! - Seithipunal
Seithipunal


காயம் காரணமாக முத்தரப்பு டி20 போட்டியில் இருந்து வெளியேறிய நியூசிலாந்து வீரர்! 

நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு டி20 தொடரானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான்-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இன்று நியூசிலாந்து அணி, அடுத்து நடக்கப் போகும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் டேர்லி மிச்சல் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக முத்தரப்பு தொடரிலிருந்து அவர் வெளியேறியுள்ளார். இதன் காரணமாக அடுத்து நடைபெற்ற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. தென்னாபிரிக்க அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் இடது கை கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதுபோன்று முக்கிய வீரர்கள் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daryl Mitchell has been ruled out of the T20 tri series


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->