#CWG2022 : ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம்.. பதக்க பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா.! - Seithipunal
Seithipunal


72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான பஜ்ரங் புனியா - கனடாவின் லச்லான் மௌரிஸ் மெக்னீலை தோற்கடித்து தங்க பதக்கம் வென்றார். காமன்வெல்த்தில் இது அவருக்கு 3-ஆவது பதக்கமாகும்.

ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் தீபக் புனியா - பாகிஸ்தானின் முகமது இனாமை தோற்கடித்து தங்கம் பெற்றாா். காமன்வெல்த் போட்டியில் இவா் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளாா்.

மகளிருக்கான 62 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் சாக்ஷி மாலிக் - கனடாவின் அனா பௌலா காடினெஸ் கொன்ஸால்ஸை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

மகளிருக்கான 57 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்றில் அன்ஷு மாலிக் - நைஜீரியாவின் ஒடுனயோ ஃபொலாசேட் அடேகுரோயேவிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றாா். தனது முதல் காமன்வெல்த் போட்டியில் களம் கண்டிருந்த அன்ஷு, தனது பிறந்தநாளிலேயே பரிசாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இதுவரை  9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CWG 2022 india medal tally table in 5th place


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->