எனக்கு வயதாகிவிட்டது, அதை மறைக்க முடியாது.. ஓய்வு குறித்து ஓப்பனாக பேசிய CSK கேப்டன் தோனி.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 29வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

 அதனைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசியதாவது, என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது என்பது முக்கியமானது. சென்னைக்கு வருவதை மிகவும் மகிழ்ச்சி ரசிகர்கள் மிகுந்த என் மீது அன்பு வைத்துள்ளனர் என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசிவரை இருக்கின்றனர் என அவர் பேசியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இவ்வாறு பேசியது நடப்பாண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK captain dhoni speech about final phase of cricket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->