கிரிக்கெட் பந்து தாக்கி அம்பயர்க்கு நேர்ந்த கோர சம்பவம்!! - Seithipunal
Seithipunal


பெம்போக்ஷைரில் உள்ள ஹன்டல்டன் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்லியம்ஸ். 80 வயதான இவர், கிரிக்கெட் நடுவராக இருந்து வருகிறார் இங்கிலாந்தில் நடைபெற்ற பெம்ப்ரோக் - நார்பெத் அணிகளுக்கு இடையேயான உள்ளூர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்ற 2வது டிவிஷன் கௌன்டி போட்டியில் நடுவராக இருந்தார்.

அந்த போட்டியின் போது நடுவர் ஜான் வில்லியம்ஸ் தலையில் பந்து பலமாக தாக்கியதில் மைதானத்திலேயே கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நடுவர் ஜான் வில்லியம்ஸ் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமணையில் அவருக்கி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதன் பின் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி அவரை ஹவர்ஃபோர்டில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றி உள்ளனர். இரண்டு வாரத்திற்கு பின் சிகிச்சை பலனின்றி நடுவர்  ஜான் வில்லியம்ஸ் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஜான் வில்லியம்ஜ் கிரிக்கெட்டிற்காக தனது வாழ்நாளில் அதிக நேரங்களை செலவிட்டுள்ளார். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவரின் மறைவிற்கு உள்ளூர் மக்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket umpire died in cricket match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->