பிறந்த நாளில் செஞ்சுரி அடித்த வீரர்கள் பட்டியல்! உலக கோப்பையில் இதுவரை இருவர் மட்டுமே! - Seithipunal
Seithipunal


உலகக் கோப்பை லீக் தொடரில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கிய இருவருமே சதம் விளாசி அசத்தினர். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 108 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உட்பட 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

தனது 32-வது பிறந்த நாள் அன்று (அக்டோபர் 20) மிட்செல் மார்ஷ் சதம் விளாசி அசத்தியுள்ளார். முன்னதாக தங்களது பிறந்த நாளில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியல் பின்வருமாறு.

2022 -ல் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் டாம் லாதம் தனது 30-வது பிறந்த நாளில் 140 ரன்கள் குவித்தார்.
1998 -ல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 25-வது பிறந்த நாளில் 134 ரன்கள் குவித்தார்.
2011-ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தனது 27-வது பிறந்த நாளில் 131 ரன்கள் குவித்தார்.
2008-ல் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா தனது 39-வது பிறந்த நாளில் 130 ரன்கள் குவித்தார்.
1993-ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி தனது 21-வது பிறந்த நாளில் 100 ரன்கள் குவித்தார்

இதில், உலகக் கோப்பை தொடரில் பிறந்த நாளில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் மிட்செல் மார்ஷ் பெற்றுள்ளார்.

முன்னதாக 2011 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தந்து பிறந்த நாளில் சதமடித்தது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket Birth day century list


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->