சென்னை ஹாக்கி உலகக் கோப்பை: போட்டிகளை இலவசமாகப் பார்க்க டிக்கெட் அறிவிப்பு
chennai hockey world cup 2025
சென்னையில் வரும் நவம்பர் 28-ஆம் தேதி முதல் டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை ரசிகர்கள் இலவசமாகக் கண்டுகளிக்கலாம் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. அதிக அணிகளும், அதிகப் போட்டிகளும் நடைபெறும் தொடராக இது அமைந்துள்ளது.
இலவச டிக்கெட் பெறுவது எப்படி?
மாணவர்கள், இளம் விளையாட்டு வீரர்கள், குடும்பத்தினர் மற்றும் ஹாக்கி விளையாட்டை விரும்பும் அனைவரும் இந்தப் போட்டிகளை நேரில் கண்டுகளிக்கும் வகையில் இலவச டிக்கெட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இலவச டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு இரண்டு வழிகளை ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது:
Ticketgenie இணையதளம்
ஹாக்கி இந்தியா மொபைல் செயலி (App)
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ரசிகர்கள் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
English Summary
chennai hockey world cup 2025